மேலும் செய்திகள்
வடசென்னை அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம்
01-Mar-2025
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திமின் ஊழியர் அமைப்பு தர்ணாமேட்டூர்:மின்கழக ஒப்பந்த தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.மேட்டூர் மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், ஈரோடு மண்டல செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் ஸ்ரீதேவி, இளங்கோ, ஈரோடு, மேட்டூர், கோபி மின் உற்பத்தி வட்ட தலைவர்கள் சிவக்குமார், சுந்தரராஜன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக அரசு மின் கழகத்தில், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பல ஆண்டுகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள், பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை மின்கழகம் நிர்ணயித்தபடி, 380 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
01-Mar-2025