உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொகுப்பூதியத்தில் ஆசிரியராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

தொகுப்பூதியத்தில் ஆசிரியராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

சேலம்: பழங்குடி நல பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் - 1ல் தேர்ச்சி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் - 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர், பட்டியலினத்தவர், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்தவர்கள், பள்ளி அருகே வசிப்போர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி மேலாண் குழு மூலம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர். வரும், 15க்குள் அரசு பழங்குடியின பள்ளிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை