உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எல்.ஐ.சி., முகவர்கள் கையெழுத்து இயக்கம்

எல்.ஐ.சி., முகவர்கள் கையெழுத்து இயக்கம்

எல்.ஐ.சி., முகவர்கள் கையெழுத்து இயக்கம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடந்த கையெழுத்து இயக்கத்தை, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முகவர்களுக்கு வழங்கப்படும் குழு காப்பீடு தொகை மற்றும் 69 வயதில் இருந்து, 85 வயதாக உயர்த்த வேண்டும். மன்ற முகவர் அல்லாத மற்ற அனைத்து முகவர்களுக்கும் குடும்ப மருத்துவ காப்பீடு, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. கோட்ட பொருளாளர் லோகநாதன், கிளை செயலாளர் சரவணன், கிளை பொருளாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி