உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்லாரி சக்கரத்தில் சிக்கி பலி

டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்லாரி சக்கரத்தில் சிக்கி பலி

சக்கரத்தில் சிக்கி லாரி உரிமையாளர் பலிசேலம், :சேலம், அரிசிபாளையம், ஆர்.டி.பால் 3-வது கிராஸ் தெருவை சேர்ந்தவர் கந்தன், 55. செவ்வாய்ப்பேட்டையில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி அனிதா, 2 மகன்கள் உள்ளனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி கந்தன், நேற்று உடையாப்பட்டியில் உள்ள கந்தாஸ்ரமம் முருகன் கோவிலுக்கு சென்றார். பின் வீட்டுக்கு செல்ல, கோவில் அருகே நடந்து சென்றபோது, எம்.சாண்ட் மணல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தார். அம்மாப்பேட்டை போலீசார் முதல்கட்ட விசாரணையில், கந்தன், மொபைல் போனில் பேசியபடி சென்றது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி