உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்பு

வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்பு

வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்புபெத்தநாயக்கன்பாளையம்,:பெத்தநாயக்கன்பாளையம், பஞ்சமர் தெரு அருகே பனையேரிக்கு செல்லும் வசிஷ்ட நதி ஓடையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு முதியவர் சடலம் மிதந்தது. மக்கள் தகவல்படி, ஏத்தாப்பூர் போலீசார், உடலை மீட்டு விசாரித்ததில், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியதம்பி, 63, என தெரிந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:நேற்று முன்தினம் இரவு, வசிஷ்ட நதி ஓடையை கடக்க, பனை மரத்தில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக பாலத்தை, 'எக்ஸல்' மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது தடுமாறி, மொபட்டுடன் ஓடையில் விழுந்து பெரிய தம்பி காயம் அடைந்துள்ளார். பின் தண்ணீரில் சிறிது துாரம் அடித்துச்செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. சந்தேக மரண வழக்கு பதிந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை