மூக்கர காளியம்மன் கோவிலில்இன்று திருக்கல்யாண உற்சவம்
மூக்கர காளியம்மன் கோவிலில்இன்று திருக்கல்யாண உற்சவம்சேலம்:சேலம், வீராணம், காட்டுவளவு மூக்கர காளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த பிப்., 18ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை, 7:00 மணிக்கு விசேஷ அபிேஷகம், மஹா தீபாராதனை, அன்னதானம் நடந்து வருகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு, சிவன், பார்வதி அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை பால்குடம், முளைப்பாரி ஊர்வலம், வரும், 4ல் சக்தி அழைத்தல், 5ல் சக்திகரகம், பூ மிதித்தல், பொங்கல் வைபவம், 6ல் திருவிளக்கு பூஜை, 7ல் சத்தாபரணம் நடக்க உள்ளது. 8ல் ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.