மேலும் செய்திகள்
ஈஸ்டர் சாம்பல்புதன் வழிபாடு
06-Mar-2025
சாம்பல் புதனை ஒட்டி தேவாலயங்களில் திருப்பலிசேலம்:இயேசு, சிலுவையில் அறையப்பட்ட, 3ம் நாளான ஞாயிறில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுதும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஏப்., 20ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய, 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் விரதம் இருக்கின்றனர்.அதன் தொடக்க நாளான, சாம்பல் புதனை ஒட்டி, சேலம், 4 ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் தலைமை வகித்தார். அதிகாலை, 6:00 மணி முதல், சிறப்பு திருப்பலி, ஆராதனை நடந்தது. இதில் பங்குத்தந்தை ஜோசப் லாசர், பங்கு தந்தையர்கள், பங்கு நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஏராளமானோருக்கு, அவர்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு ஆசி வழங்கப்பட்டது.தொடர்ந்து தவக்காலத்தில் வரும், 7 வெள்ளியும் சிறப்பு தினமாக கருதப்படும் என்பதால், ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடக்கும். ஏப்., 13ல் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படும். அதேபோல் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், அழகாபுரம் புனித மிக்கேல், செவ்வாய்பேட்டை ஜெயராகினி, கோட்டை லெக்லர், ஜங்ஷன் சி.எஸ்.ஐ., சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர், சூரமங்கலம் இருதய ஆண்டவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடு நடந்தது.
06-Mar-2025