உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ., ஒட்டிய நோட்டீஸ்: டாஸ்மாக் ஊழியர் கிழிப்பு

பா.ஜ., ஒட்டிய நோட்டீஸ்: டாஸ்மாக் ஊழியர் கிழிப்பு

பா.ஜ., ஒட்டிய 'நோட்டீஸ்': டாஸ்மாக் ஊழியர் கிழிப்புமேட்டூர் :மேட்டூர், வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து கோம்புரான்காடு டாஸ்மாக் கடையில், பா.ஜ., மகளிரணி மாவட்ட செயலர் ராதா, ஒன்றிய தலைவர் சசிரேகா, நேற்று, 'நோட்டீஸ்' ஒட்டினர். அதில், 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என குறிப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'அப்பா' என்றும் இடம்பெற்றிருந்தது. உடனே கடை ஊழியர், அந்த நோட்டீசை கிழித்து, 'இங்கு ஒட்டக்கூடாது' என எச்சரித்தார். இதனால் கடை ஊழியர், பா.ஜ.க,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், பா.ஜ.,வினர், கடையின் வேறு இடத்தில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றனர். இதில், நங்கவள்ளி வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் உள்ளிட்ட பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூர், காவேரிகிராஸ், எலிகரடு டாஸ்மாக் கடை சுவர்களில், சேலம் மேற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலர் தனம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யசோதா, 'நோட்டீஸ்' ஒட்டினர். மேலும் கொளத்துார், ஜலகண்டாபுரம், மேச்சேரியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளிலும், மகளிர் அணி சார்பில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.மதுக்கடை மூடல்பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை டாஸ்மாக் கடைக்கு நேற்று மதியம், 12:10 மணிக்கு, பா.ஜ.,வின் தும்பல் ஒன்றிய தலைவர் கரியவேலன் தலைமையில் நிர்வாகிகள் சென்று, முதல்வர் படத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டினர்.இதை அறிந்து, முன்னதாகவே டாஸ்மாக் ஊழியர்கள், கடையை மூடிச்சென்றனர். நிர்வாகிகள் சென்றதும், மீண்டும் கடையை திறந்தனர். அதேபோல் சேர்வாய்பட்டு, தும்பல் அரசு டாஸ்மாக் கடைகளில், பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ