உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா.திறன் சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோவில் கைது

மா.திறன் சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோவில் கைது

மா.திறன் சிறுமியை கடத்திய கொத்தனார் 'போக்சோ'வில் கைதுபனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டியை சேர்ந்த, 17 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி, 10ம் வகுப்பு படித்துள்ளார். அப்பகுதியில் தையல் பயிற்சி பெற்று வந்தார். கடந்த, 19 காலை, பஸ்சில் தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து, சிறுமியை கடத்திய கருப்பூர், தேக்கம்பட்டியை சேர்ந்த கொத்தனார் கணபதி, 27, என்பவரை நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சிறுமியின் பக்கத்து வீட்டுக்கு கட்டட வேலைக்கு கணபதி சென்றபோது சிறுமியிடம் பழகி, அதன்மூலம் கடத்தி சென்றுள்ளார். இதுபோல் சில பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். அப்போது வழக்கில் சிக்காமல் தப்பிவிட்டான். இம்முறை போக்சோ, எஸ்.சி., -எஸ்.டி., வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை