உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் கிழக்கு கோட்டத்தில்மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில்மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில்மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்சேலம்:கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடக்கிறது.சேலம் கிழக்கு கோட்ட மின் செயற் பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேலம் கிழக்கு கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (ஏப், 9) காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில், சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு, குறைகளை கேட்க உள்ளார். எனவே கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர், தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி