கோர்ட்டில் தப்ப முயன்ற கைதியை வளைத்த போலீஸ்
கோர்ட்டில் தப்ப முயன்ற கைதியை வளைத்த போலீஸ்ஓமலுார்:ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, 5 பேரை, சேலம் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓமலுார் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். மாலை, 4:00 மணிக்கு, நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்தபோது, பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த எபின்ஜானி, 30, என்பவர், போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த போலீசார், விரட்டிச்சென்றனர். நீதிமன்றம் வெளியே போலீஸ் வேனில் இருந்த போலீசார், எபின்ஜானியை சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின் எபின்ஜானியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.