உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழில் தொடங்க திட்டம்; 10,000 மகளிர் குழு உருவாக்கம்தமிழக பட்ஜெட்டுக்கு சேலம் பெண்கள் வரவேற்பு

தொழில் தொடங்க திட்டம்; 10,000 மகளிர் குழு உருவாக்கம்தமிழக பட்ஜெட்டுக்கு சேலம் பெண்கள் வரவேற்பு

தொழில் தொடங்க திட்டம்; 10,000 மகளிர் குழு உருவாக்கம்தமிழக பட்ஜெட்டுக்கு சேலம் பெண்கள் வரவேற்புசேலம்:தமிழக பட்ஜெட்டில் லட்சம் மகளிருக்கு மானியத்துடன் சிறு தொழில் தொடங்குவதற்கான புது திட்டம், 10,000 புது மகளிர் குழு உருவாக்குவதற்கான அறிவிப்புக்கு, சேலம் பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன்படி சேலம் முக்கிய பிரமுகர்கள், மக்கள் கூறிய கருத்து:சேலம் பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலை வர், ஆடிட்டர் ரவீந்திரன்: கல்லுாரிகளில் படிக்கும், 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்பு இல்லை. கிராம பகுதிகளில், 6,500 கி.மீ.,க்கு சாலை வசதி அறிவிப்பு, கிராம வளர்ச்சிக்கு உதவும்.சங்கர் நகர் இல்லத்தரசி எஸ்.ஸ்ரீதேவி: ஒரு லட்சம் மகளிருக்கு, 20 சதவீத மானியத்துடன், 10 லட்சம் ரூபாய் வரை, புதிதாக சிறு தொழில் தொடங்க, புது திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஆனால் தகுதியுள்ள பெண்களுக்கு சென்றடையும்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அஸ்தம்பட்டி, டி.வி.எஸ்., காலனி, இல்லத்தரசி ஈ.ராதா: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 37,000 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அந்த குடும்பத்தை உயர்த்தவே பயன்படும். மேலும், 10,000 புது மகளிர் குழு உருவாக்க அறிவிப்பு வரவேற்கத்தக்கது.சேலம், விலங்குகள் நல காப்பகர் எஸ்.வித்யா: தெருநாய்களுக்கு காப்பகம் அமைப்பதற்கோ, மற்ற விலங்கு நலனோ இடம்பெறாதது வருத்தம். மூத்த குடிமக்களுக்கு அன்புச்சோலை பெயரில், முதியோர் இல்லம் அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். முதியோர் இல்ல பண்பாடு, குடும்ப அமைப்பை சீர்கெடுக்கும் என்பதே என் கருத்து.சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தலைவர் கே.மாரியப்பன்: ஊட்டி, கொடைக்கானல், மகாபலிபுரம் பகுதிகளில் சுற்றுலாத்துறை மூலம் சிறப்பு திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏற்காடு, கொல்லிமலைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஓமலுாரில், 200 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருந்தும் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அனுமதி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ