உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்சிறுவன் உள்பட 8 பேர் காயம்

ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்சிறுவன் உள்பட 8 பேர் காயம்

ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்சிறுவன் உள்பட 8 பேர் காயம்ஓமலுார், :பொங்கல் பண்டிகையை ஒட்டி, சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே ரெட்டிப்பட்டி பிடாரியம்மன் கோவிலில் நேற்று மாலை, 4:00 மணிக்கு எருதாட்டம் நடந்தது. முதலில் சுவாமி மாடு கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட மாடுகள் விடப்பட்டன. கோவிலை சுற்றியும், வீடுகளின் மாடிகளிலும் நின்று, எருதாட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். சில மாடுகள், சாலையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்தது.இதில் சேலம், கொல்லப்பட்டியை சேர்ந்த சிறுவன் ஹரீஷ், 5, ஓமலுார், காமராஜர் நகர் மோகன்ராஜ், 19, மாலிகவுண்டனுார் விஜயராஜன், 36, கஞ்சநாயக்கன்பட்டி சீத்தாமாள், 55, சீமுச்சீ கவுண்டர், 60, ரெட்டிப்பட்டி விஜயன், 55, ரிஷி, 17, அமரகுந்தி ராமலிங்கம், 49, ஆகியோர் காயமடைந்து, அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், திண்டமங்கலம், பனங்காட்டூரில், 20 மாடுகளுடன் எருதாட்டம் நடந்தது. ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை