மேலும் செய்திகள்
லஞ்ச பணத்தை கையால் தொடாத அதிகாரி!
07-Aug-2024
மல்லுார்: கறிக்கோழி பண்ணையில் பணியாற்றிய பெண் காசாளர், 80 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, உரிமையாளர் போலீசில் புகார் தந்த நிலையில், பெண் காசாளரின் கணவர், கோழிப்-பண்ணை உரிமையாளர் மீது புகாரளித்தார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, ஆத்துமேட்டை சேர்ந்தவர் தியாகராஜன், 49. பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில், கறிக்கோழி பண்ணை நடத்துகிறார். அங்கு பொய்மான்கரட்டை சேர்ந்த ரேவதி, 30, காசாளராக பணிபுரிந்தார்.இந்நிலையில் நேற்று, மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் தியாக-ராஜன் புகார் அளித்தார். அதில், 'என் பண்ணையில் மாதந்-தோறும், 1 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. 2022 முதல், 2024 ஜூன் 1 வரை பணிபுரிந்த ரேவதி, கோழி விற்பனை ரசீதில் விலையில் மாற்றம் செய்து, 80 லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்துள்ளார். ரேவதி, அவரது கணவர் மணிகண்டன், சாப்பாட்டு பையில் வைத்து பணத்தை எடுத்துச்சென்றுள்ளனர். கணினியில் விலை மாற்றம் செய்து நம்பிக்கை மோசடி செய்து, நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்' என கூறியுள்ளார். அதன்படி மல்லுார் போலீசார், தம்பதி மீது வழக்குப்பதிந்தனர்.தொடர்ந்து தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரியும் மணி-கண்டன் புகார் அளித்தார். அதில், 'கடந்த ஜூன், 7ல், என்னையும், மனைவியையும், தியாகராஜன், கார்த்தி உள்ளிட்ட சிலர் அடித்து உதைத்து ஜாதி பெயரை கூறி திட்டினர். எங்களுக்கு சொந்தமாக இரு இடங்களில் இருந்த வீட்டுமனைகள், 'தோஸ்த்' வாகனம், சுற்றுலா வேன், பைக், சிட்பண்ட் பணம் ஆகியவற்றை எழுதி வாங்கிக்கொண்டனர். எனக்கும், மனைவிக்கும் மிரட்டல் விடுத்-தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர். அதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Aug-2024