உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

சேலம்: சேலம், 58வது கோட்டத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்-பினர் அட்டை வழங்கும் விழா, கொண்டலாம்பட்டி பகுதி சார்பில் நடந்தது. பகுதி செயலர் பாண்டியன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் பேசுகையில், ''தமிழ-கத்தில் இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, சேலத்தில் மேம்பா-லங்களை கட்டிக்கொடுத்து போக்குவரத்து நெரிசலை குறைத்தார். அதேபோல் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றிபெற்று இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராக பதவியேற்பார். உறுப்பினர் அட்டை அனைத்து நிர்வாகிகளையும் சென்றடையும்படி, 'பூத்' வாரியாக சென்று வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பொரு-ளாளர் வெங்கடாசலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பகுதி செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஏற்காட்டில் ஒன்றிய செயலர் அண்ணாதுரை தலை-மையில் விழா நடந்தது. அதில், 9 ஊராட்சிகளில், 118 கிளை-களில் உள்ள 9,000 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், அந்தந்த கிளை செயலர்களிடம் வழங்கப்பட்டன. புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., சித்ரா, ஐ.டி., விங் மாவட்ட செயலர் ஜெயகாந்தன், மாணவரணி ஒன்றிய செயலர் புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ