உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊசி போட்டு வைத்தியம் பிசியோதெரபிஸ்ட் கைது

ஊசி போட்டு வைத்தியம் பிசியோதெரபிஸ்ட் கைது

ஓமலுார்: காடையாம்பட்டி, கே.மோரூரை சேர்ந்த, பிசியோதெரபிஸ்ட் விஜயகுமார், 33. இவர், 14 ஆண்டுகளாக, 'பிசியோ கிளினிக்' நடத்தி வந்தார். அங்கு சில மாதங்களாக அவர், நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிப்பதாக, தீவட்டிப்பட்டி போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார், கே.என்.புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருடன் நேற்று கிளினிக் சென்றனர். அப்போது விஜயகுமார், ஊசி, மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்-டில்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளுடன் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்ததாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து விஜயகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி