உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் நீதிமன்றங்களுக்கு அரசு வக்கீல்கள் நியமனம்

சேலம் நீதிமன்றங்களுக்கு அரசு வக்கீல்கள் நியமனம்

சேலம்: சேலம் நீதிமன்றத்தில் அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட அரசு குற்றவியல் வக்கீலாக, கடந்த வாரம் அருள் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மற்ற நீதிமன்றங்களுக்கும் புதிய அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்தியவசிய பொருட்கள் சிறப்பு நீதிமன்ற அரசு வக்கீலாக ஐயப்பமணியும், சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீலாக தனசேகரன், நில ஆர்ஜிதம் அரசு வக்கீலாக ஆறுமுகம், மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு வக்கீலாக கலைச்செல்வி, கஞ்சா வழக்கு நீதிமன்ற அரசு வக்கீலாக வீரக்குமார், மாவட்ட நீதிமன்ற தீண்டாமை ஒழிப்பு பிரிவு அரசு வக்கீலாக அருண்குமார், முதலாவது விரைவு நீதிமன்ற அரசு வக்கீலாக பாலசுப்ரமணியம், இரண்டாவது விரைவு நீதிமன்ற அரசு வக்கீலாக மதிவாணன், முதன்மை சார்பு நீதிமன்ற அரசு வக்கீலாக முருகேசன், முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வக்கீலாக மணிவண்ணன், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வக்கீலாக ராஜா, மனித உரிமைகள் அரசு வக்கீலாக சண்முகசுந்தரம், சிவில் அரசு வக்கீலாக புவனேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை