உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரூரில் கடுங்குளிர்மக்கள் அவதி

அரூரில் கடுங்குளிர்மக்கள் அவதி

அரூரில் கடுங்குளிர்மக்கள் அவதி அரூர்,:தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கடுங்குளிர் நிலவுகிறது. இரவு முதல், காலை, 8:00 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதன் பிறகே வெயில் அடிக்கத் துவங்குகிறது. கடும் குளிரை சமாளிக்கும் விதமாக நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா அணிந்து செல்கின்றனர். காலையில் கூலி வேலைக்கு மற்றும் பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் கடும்பனிப்பொழிவு மற்றும் குளிரால் அவதிக்குள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !