உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொங்கல் கொண்டாடிய வக்கீல்கள்

பொங்கல் கொண்டாடிய வக்கீல்கள்

சேலம்: சேலம் வக்கீல் சங்கம் சார்பில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். செயலர் நரேஷ்பாபு முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பங்கேற்றார். கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, சாட்டை குச்சி, சிலம்பம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொங்கல் விழாவுக்கு ஜல்லிக்கட்டு காளைகள், சாரட் குதிரை வண்டி உள்ளிட்டவை காட்சிக்கு நிறுத்தப்பட்டன. இவற்றுடன் விழாவுக்கு வந்தவர்கள், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அதேபோல் மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வக்கீல்கள், பொங்கல் வைத்து கொண்டாடினர். மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடிய விழாவில், நீதிபதிகள் கமலகண்ணன், மணிவர்மன், மாஜிஸ்திரேட் பத்மபிரியா, மயில்சாமி, மேட்டூர் அணை வக்கீல் சங்க தலைவர் செந்தில்குமார், செயலர் மனோகர், பொருளாளர் விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை