உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடுஓமலுார் :காடையாம்பட்டி தாலுகா ஊமகவுண்டம்பட்டியில் உள்ள, எல்லை பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று காலை சக்தி கரகம், சுவாமி மெரமனை, மதியம் பொங்கல் வைபவம் நடந்தது. இதில் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று வண்டி வேடிக்கை, சத்தாபரணம், புஷ்ப விமானத்தில் அம்மன் பவனி நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு வீழா, அம்மன் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறும்.இன்று எருதாட்டம் :பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஓமலுார் அருகே அமரகுந்தி ஊராட்சி, அத்திராம்பட்டி பொன்மாரியம்மன் கோவில் பகுதியில், இன்று மதியம், 3:00 மணிக்கு எருதாட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ