உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை மதிப்பீட்டாளரின்புரோக்கரும் கைது

நகை மதிப்பீட்டாளரின்புரோக்கரும் கைது

நகை மதிப்பீட்டாளரின்புரோக்கரும் கைதுகெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள கனரா வங்கி கிளையில், கூடமலையை சேர்ந்த, வாடிக்கையாளர்கள் சேகர், பழனிசாமி, 84 பவுன் நகைகளை அடகு வைத்து, 41 லட்சம் ரூபாய் பெற்றனர். இந்த நகைகள் குறித்து, அதன் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தபோது, கவரிங் என தெரிந்தது.இதுகுறித்து கிளை மேலாளர் மித்ராதேவி புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரித்து, ஆத்துாரை சேர்ந்த, நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர், 45, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில், கூடமலையைச் சேர்ந்த முதலி, 50, நகை மதிப்பீட்டாளருக்கு புரோக்கராக இருந்ததும், சேகர், பழனிசாமி மூலம், போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்ததும் தெரிந்தது. இதனால் பழனிசாமி, சேகரை சாட்சிகளாக சேர்த்து, முதலியை நேற்று, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ