மேலும் செய்திகள்
அக்னி கரக ஊர்வலம் கோலாகலம்
31-Jan-2025
பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்ஓமலுார்: ஓமலுார் அருகே தொளசம்பட்டியில், பழமையான துளசி, அலமேலு மங்கா சமேத அப்ரமேய பெருமாள் கோவில் தை தேரோட்ட விழாவை முன்னிட்டு, நேற்று மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக சீர்வரிசை தட்டுகளுடன் பக்தர்கள் தேர் வீதியில் ஊர்வலமாக வந்தனர். தேரின் முன் கலை நிகழ்ச்சியும் களைகட்டியது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்து நிலை பெறச்செய்தனர். இன்று இரண்டாம் நாள் தேரோட்டமாக, பஸ் ஸ்டாப் வரையும், நாளை மாலை தேர் நிலை சேறுதல் நிகழ்ச்சியும் நடக்கும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
31-Jan-2025