உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைலாசநாதர் கோவிலில்தேரோட்டம் தொடக்கம்

கைலாசநாதர் கோவிலில்தேரோட்டம் தொடக்கம்

கைலாசநாதர் கோவிலில்தேரோட்டம் தொடக்கம்தாரமங்கலம்:தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு, கடந்த, 3ல் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும், சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிகள், சேஷ, புலி, பூத உள்பட, 8 வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. 9ம் நாளான நேற்று, 3 நாள் தைப்பூச தேரோட்டம் தொடங்கியது. இதை ஒட்டி காலையில் கைலாசநாதருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசித்தனர். மதியம், 12:00 மணிக்கு மேல், பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிகளை எழுந்தருளச்செய்தனர். அதேபோல் விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிகள், சிறு தேரில் எழுந்தருள செய்தனர். மாலை, 4:30 மணிக்கு மேல், தேர் நிலையத்தில் சுவாமிக்கு பூஜை செய்து, சிறு தேரை பக்தர்கள் முதலில் இழுத்தனர். தொடர்ந்து பெரிய தேரை, 'அரோகரா' கோஷம் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அண்ணா சிலை பகுதியில், இரு தேர்களும் நிலை நிறுத்தப்பட்டன. இன்று மாலை, 4:00 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டம் தொடங்கும். இதில் அறநிலையத்துறை ஆய்வாளர் கதிரேசன், கோவில் செயல் அலுவலர் புனிதராஜ், தேர் கமிட்டி உமாபதி குருசாமிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !