உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டிசேலம்:சேலம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு ஆளுமைப்பண்பு, பங்கேற்கும் திறன், தனித்திறன் வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த, விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. கோ - கோ, ஜூடோ, த்ரோபால், செஸ், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.முன்னதாக போட்டிகளை தொடங்கிவைத்து, முதல்வர் காந்திமதி கூறுகையில், ''மாணவியரின் ஆளுமைத்திறன், தலைமைப்பண்பை உருவாக்கும்படி, இப்போட்டி நடத்தப்படுகிறது. ஒரு துறை மாணவியர், மற்ற துறை மாணவியரோடு பழகி, அறிவை விரிவாக்கிக்கொள்ள முடியும்,'' என்றார்.இயற்பியல் கருத்தரங்கம்அதே கல்லுாரியில், இயற்பியல் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. துறைத்தலைவர் திரிவேணி வரவேற்றார். ஓய்வு பெற்ற, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், 'இயற்பியல் துறையில், பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு' தலைப்பில் பேசினார். ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை