உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புது மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்

புது மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்

புது மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்வீரபாண்டி:சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன், சேலத்தில் இருந்து கோவைக்கு வாகனங்கள் செல்லும்படி, ஒரு வழிப்பாதை மேம்பாலம், 20 ஆண்டுக்கு முன் கட்டி பயன்பாட்டில் உள்ளது. அந்த பாலத்தை இருவழிப்பாதையாக விரிவுபடுத்த முடிவு செய்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 24.76 கோடி ரூபாய் மதிப்பில் புது மேம்பாலம் கட்டும் பணி, 2023 டிசம்பரில் தொடங்கியது. பழைய பாலத்துக்கு இணையாக, 10 மீ., உயரத்தில், 13.5 மீ., அகலம் 90 மீ., நீளத்தில் பாலம் கட்டும் பணி நடந்து, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நேற்று முதல், அந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. விரைவில் தடுப்புச்சுவர் கட்டுமானம், கருப்பு, வெள்ளை கோடுகள் வரைந்து மின் விளக்குகள் அமைத்து, 100 சதவீத பணியும் முடிந்து, பாலம் முறைப்படி போக்குவரத்துக்கு திறக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை