உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாற்றுத்திறனாளியை தாக்கியபோதை கும்பலுக்கு வலை

மாற்றுத்திறனாளியை தாக்கியபோதை கும்பலுக்கு வலை

போதை கும்பலுக்கு வலைசேலம்:சேலம், அம்மாபேட்டை, கிருஷ்ணன்புதுாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி விஜயகுமார், 36. இவர், நண்பர் சரவணனுடன், இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை, 5:00 மணிக்கு அங்குள்ள மேற்கு தெரு ரேஷன் கடைக்கு புறப்பட்டார். அப்போது கார்பெட் தெருவை சேர்ந்த இளையரசு, சிஞ்சு உள்பட, 3 பேர், 'குடி'போதையில் வழிமறித்துள்ளனர். இதில் சரவணன் தப்பிவிட்டார். பின் மாற்றுத்திறனாளியை இரும்பு கம்பியால் தாக்கி அவரிடமிருந்த, 1,000 ரூபாய், ெஹட்செட்டை பறித்துக்கொண்டு, 3 பேரும் தப்பினர். காயம் அடைந்த மாற்றுத்திறனாளி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார், 3 பேரையும் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ