உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாய்மொழி தின விழாஉறுதி மொழி ஏற்பு

தாய்மொழி தின விழாஉறுதி மொழி ஏற்பு

தாய்மொழி தின விழாஉறுதி மொழி ஏற்புசேலம், பஉலக தாய்மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் தாய்மொழி முக்கியத்துவத்தை கல்லுாரி மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில், அனைத்து கல்லுாரி, பல்கலையில், தாய்மொழி தினத்தை கொண்டாட, யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலத்தில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகளில், தாய்மொழி தின விழா, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சேலம் அரசு கல்லுாரியில் தமிழ்துறை சார்பில், 'இன்றைய நிலையில் தமிழ் தாய்மொழியாக இருக்கிறதா? வாய்மொழியாக இருக்கிறதா?' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. தமிழ்துறை பேராசிரியர் கந்தசாமி நடுவராகவும், பல்துறை ஆசிரியர்கள் பேச்சாளர்களாகவும் பங்கேற்றனர். திரளான மாணவ, மாணவியர் கேட்டு ரசித்தனர்.அதேபோல் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ராமச்சந்திரன் தலைமையில், கமிஷனர் பாலசுப்ரமணியன்(பொ) முன்னிலையில், மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ