பள்ளி மாணவர்களுக்கு மின்வாரியம் விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு மின்வாரியம் விழிப்புணர்வுபனமரத்துப்பட்டி:பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பயன்படுத்தல் குறித்து, மல்லுாரில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மாதிரிப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு, கடந்த, 26ல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேலம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வீட்டில் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பயன்படுத்தவும், மின்சாதன வீட்டு உபயோக பொருட்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும் அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து மின் கசிவு, உயர் மின் அழுத்தம், மின் விபத்தை தடுத்தல், சேதமடைந்த ஒயர், மின் சாதன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மின் சிக்கனம், மின் தேவை, பாதுகாப்பு குறித்து பேசிய, 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மின் வாரிய அதிகாரிகள் பரிசு வழங்கினர். உதவி செயற்பொறியாளர் சத்தியமாலா, மல்லுார் உதவி பொறியாளர் முருகன், ஆசிரியர்கள், மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.