உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியது

மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியது

மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியதுதலைவாசல்:தலைவாசல், சார்வாய் கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, பள்ளியில் இருந்து வந்த சிறுமி, வீட்டில் இருந்த, 13 வயது சகோதரியை கடைக்கு அனுப்பிவிட்டு, இவர் துாக்கிட்டுக்கொண்டார். தங்கை திரும்பிவந்தபோதும், வீடு திறக்காததால், உறவினர்களுடன் வீட்டை திறந்து பார்த்தபோது, சிறுமி இறந்து கிடந்தார். தலைவாசல் போலீசார் உடலை கைப்பற்றி சோதனை செய்தனர்.போலீசார் கூறுகையில், 'மாணவி, அவரது தாய்க்கு இரு பக்க அளவில் கடிதம் எழுதியுள்ளார். அதில் சக மாணவியர், 5 பேர், கேலி, கிண்டல் செய்து, தகாத வார்த்தையில் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மன உளைச்சலில் மாணவி துாக்கிட்டுள்ளார். தொடர்ந்து விசாரிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை