உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண் சிசு கருக்கலைப்பு தடுக்க விழிப்புணர்வு

பெண் சிசு கருக்கலைப்பு தடுக்க விழிப்புணர்வு

பெண் சிசு கருக்கலைப்பு தடுக்க விழிப்புணர்வுசேலம்:சேலத்தில், மகப்பேறு மருத்துவ சங்கம் சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தேவிமீனாள் தொடங்கி வைத்தார். காந்தி மைதானத்தில் தொடங்கியஊர்வலம், அம்பேத்கர் சிலை சந்திப்பு, வின்சென்ட், காந்தி சாலை வழியே அஸ்தம்பட்டியில் நிறைவுபெற்றது. இதில் தனியார் கல்லுாரி செவிலியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து சங்க தலைவர் சரவணகுமார் கூறுகையில், ''பெண் சிசு கொலைகள் குறைந்தாலும், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்வது தொடர்கிறது. அதை தடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஊர்வலம் நடத்தப்பட்டது,'' என்றார். செயலர் தவஸ்ரீ, துணைத்தலைவர் சண்முகவடிவு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ