மனைவி, மாமியாரை வெட்டியமேஸ்திரி கொலை செய்யப்பட்டாரா
மனைவி, மாமியாரை வெட்டியமேஸ்திரி கொலை செய்யப்பட்டாராபனமரத்துப்பட்டி:மல்லுார் அருகே அம்மாபாளையம் ஊராட்சி சிங்காரத்தோப்பை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிவேல், 40. இவரது மனைவி ரேவதி, 35. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அருகில், ரேவதியின் தாய் சித்தாயி, 60, வீடு உள்ளது.தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு, 'போதை'யில் வந்த மணிவேல், ரேவதி, சித்தாயிடம் தகராறு செய்துள்ளார்.தொடர்ந்து கத்தியால் இருவரையும் வெட்டியுள்ளார். தடுக்க வந்த உறவினர் மணி, 50, என்பவருக்கும் வெட்டு விழுந்தது. அங்கிருந்து ஏரிக்கரை பஸ் ஸ்டாப் சென்ற மணிவேல், மல்லுார் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறி தப்பினார்.சிலர், இரு சக்கர வாகனத்தில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். மல்லுார் அருகே பஸ்சை நிறுத்தி, மணிவேலை இறக்க முயன்றனர். அப்போது பஸ்சில் இருந்து தடுமாறி விழுந்த மணிவேல் மயங்கினார்.பின் மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மணிவேல் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'போதையில் இறந்தாரா, அடித்துக்கொல்லப்பட்டாரா என விசாரணைக்கு பின்தான் தெரியவரும்' என்றனர்.