மேலும் செய்திகள்
அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
06-Mar-2025
அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் ரத்துவாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்புக்கு, சின்னமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இதனால், அந்த ஊராட்சி மக்கள், நேற்று முன்தினம் தான்தோன்றீஸ்வரர் கோவிலை முற்றுகையிட்டனர். தொடர்ந்து செயல் அலுவலர் கஸ்துாரியிடம், 'சின்னம்மநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு இரு அறங்காவலர் குழு உறுப்பினர் வழங்க வேண்டும். அதுவரை தலைவர் நியமனம் செய்யக்கூடாது' என, மனு அளித்தனர். இந்நிலையில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று ஓட்டுப்பதிவு மூலம் நடக்கவிருந்த அறங்காவலர் குழு தலைவர் தேர்தல், நாள் குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, செயல் அலுவலர் கஸ்துாரி தெரிவித்தார்.
06-Mar-2025