உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வசதிக்குஏங்கும் பிரபு நகர் மக்கள்

அடிப்படை வசதிக்குஏங்கும் பிரபு நகர் மக்கள்

அடிப்படை வசதிக்குஏங்கும் பிரபு நகர் மக்கள்சேலம்:சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு சின்னதிருப்பதி, பிரபுநகர் மக்கள் ஒருசேர திரண்டு, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:பிரபு நகரில், 140 குடும்பத்தினர், 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அடிப்படை தேவையான சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி அறவே இல்லாத காரணத்தால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். குண்டும், குழியுமான சாலையில் நடக்க முடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோரின் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அடிக்கடி தலைகுப்புற கவிழ்ந்து, ரத்த காயங்களுடன் வீடு திரும்புகின்றனர். சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று அபாயம் உள்ளது. எனவே, தார்சாலை, சாக்கடை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி