ஒன்றிய அலுவலகத்தில் ஒற்றை குரங்கு சேட்டை
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாலை நேரத்தில் ஒரு குரங்கு சுற்றித்திரிகிறது. அலுவலகம் வரும் மக்கள் மீது திடீரென ஏறி தலைமுடியை பிடித்து இழுக்கிறது. பாக்கெட்டில் கை விட்டு பணம், பேனா உள்ளிட்ட பொருட்களை துாக்கி வீசுகிறது. விரட்ட முயன்றால், கைகளை பிடித்து கடிக்கிறது.தினமும் இரண்டு, மூன்று பேரை, குரங்கு கடித்து விடுகிறது. குரங்கின் பல், நகம் பட்டு, காயம் ஏற்படுவதால், மக்கள், மருத்துவ சிகிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். அதனால் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அட்டகாசம் செய்யும் குரங்கை வனத்துறையினர் பிடித்து செல்ல வேண்டும்.