உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வுசேலம்:-சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்றத்தில், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார். அதில், 2023 நவ., 3ல் நடந்த விபத்தில் கால்களை இழந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கார்த்திகேயனுக்கு, 46.92 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகைக்கு காசோலை வழங்கப்பட்டது. அதேபோல், சேலம், சங்ககிரி, மேட்டூர், ஓமலுார், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில், 16 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய, 5,024 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 3,912 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், 48.36 கோடி ரூபாய், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கிடைத்தது. இதில் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையில், 232 வழக்குகள், 7.90 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் செய்து வைக்கப்பட்டது. குறிப்பாக, 78 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில், 7.38 கோடி ரூபாய் சமரசம் செய்து வைக்கப்பட்டது. அதேபோல் ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சார்பு நீதிபதி கணேசன் தலைமையில், 374 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 5.44 கோடி ரூபாய் தீர்வுத்தொகை வழங்கப்பட்டது. -குறிப்பாக, 5 ஆண்டுக்கு மேல் நிலுவையில் இருந்த, 9 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ