மேலும் செய்திகள்
5 கடைகளில் திருட்டு
15-Feb-2025
ஓடும் காரில் தீதப்பிய 3 பேர்வாழப்பாடி:வாழப்பாடி, சேசன்சாவடியை சேர்ந்தவர் பரத், 37. இவரது ஆம்னி காரை, அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான, டிரைவர் வீரமுத்து, 55, எடுத்துக்கொண்டு, அவரது மகன் திருமணத்துக்கு மணப்பெண்ணை அழைத்து வர, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். உறவினர்கள் அண்ணாமலை, யோகேஷ் உடனிருந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பாலத்தில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, கார் இஞ்ஜினில் புகை வந்தது. வீரமுத்து காரை நிறுத்தினார். 3 பேரும் இறங்கினர். புகையை கட்டுப்படுத்த முயன்றபோது, தீப்பற்றி மளமளவென எரிந்தது. தகவல் அறிந்து வாழப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கார் சேதமானது. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Feb-2025