டிடெக்டிவ் ஏஜன்சி பெண் உள்பட 4 பேர் கைதுஓய்வு வி.ஏ.ஓ., வீட்டில் கொள்ளையடித்த வழக்கு
ஆத்துார்:தம்மம்பட்டி, மண்மலை ஊராட்சி பாலக்காட்டை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது வீட்டில் இருந்த பெண்களிடம், கடந்த மார்ச், 29ல் கத்தியை காட்டி மிரட்டிய, 5 பேர், 20 பவுன் நகைகள், 10,000 ரூபாயை கொள்ளையடித்துச்சென்றனர். தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 5 தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில் திருப்பூரை சேர்ந்த, கார் டிரைவர் ஆனந்தகுமார் உள்பட, 2 பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், தனியார் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்திய, கோவை, சிட்கோ பகுதியை சேர்ந்த விஜயகுமார், 43, சுந்தராபுரம் சந்தியா, 25, தொண்டாபுத்துார் உதவியாளர் ரவிச்சந்திரன், 48, நண்பரான, திருச்சி, துறையூர், மாரடி அஸ்வின்காந்த், 50, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவையை சேர்ந்த, பி.எஸ்சி., பட்டதாரி சந்தியா, விஜயகுமார், 'சிவகர்ணா டிடெக்டிவ் ஏஜன்சி' நடத்தினர். இவர்களுக்கு அஸ்வின்காந்த், வழித்தடம் உள்ளிட்ட தகவல் தெரிவித்துள்ளார். இவருக்கு இரு மனைவிகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி, பா.ஜ., மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலராக உள்ளார். ரவிச்சந்திரன், கொள்ளை குறித்து வரைபடம் போட்டு கொடுத்துள்ளார். 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், கைது எண்ணிக்கை, 6 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.