உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிராக்டர்களை சிறை பிடித்த பொதுமக்கள்

டிராக்டர்களை சிறை பிடித்த பொதுமக்கள்

ஆத்துார்: ஆத்துார் அருகே, புங்கவாடி கிராமத்தில், 30 ஏக்கர் பரப்ப-ளவில், ஊராட்சிக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று, பதிவு எண் இல்லாத டிராக்டர்களில், மண் அள்ளிச் செல்வதாகவும், உள்-ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கு மண் வழங்கவில்லை என, மண் அள்ளும் பணிகளை தடுத்து நிறுத்தி, மண்ணுடன் சென்ற மூன்று டிராக்டர்களை, பொதுமக்கள் சிறைபிடித்தனர்.வி.ஏ.ஓ., மணிமொழி, விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினார். விவசாயிகள், 'புங்கவாடியில் உள்ள ஏரியில் மண் அள்ளுவதற்கு, மஞ்சினி பகுதியை சேர்ந்தவர்க-ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புங்கவாடி விவசாயிக-ளுக்கு அனுமதி வழங்கவில்லை. மண் அள்ளும் டிராக்டர்கள் பதிவு எண் இல்லாத நிலையில் இயக்கப்படுகிறது. மண் அள்ளும் வாகனங்களின் உரிமம், பதிவு எண் விபரங்களை வழங்-கிய பின் தான், மண் அள்ள வேண்டும் என்பது விதியாகும். பதிவு எண் இல்லாத வாகனத்துக்கு அனுமதி இல்லை' என தெரி-விக்கப்பட்டது.வி.ஏ.ஓ., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், விவசா-யிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை