மேலும் செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
05-Sep-2024
சேலம்: சேலம், உடையாப்பட்டியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 5ல் கண-பதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை கோ பூஜை, யாக கால பூஜை நடத்தி, கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபி ேஷகம் செய்யப்பட்டு கும்பாபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் எழுப்பி வழிபட்டனர்.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜை நடத்தி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்-கப்பட்டன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கஸ்துாரி, தக்கார் விமலா உள்ளிட்டோர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.செல்லாண்டியம்மன்சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 23ல் தொடங்கியது. நேற்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விநாயகர், முருகன், மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோபுர கலசங்க-ளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து புனிதநீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின் செல்-லாண்டியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்து தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.தீர்த்தக்குட ஊர்வலம்இடங்கணசாலை நகராட்சி கொசவப்பட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, கடந்த, 28ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை, கோவில் வளாகத்தில் கூடிய பக்-தர்கள், சுவாமியை வழிபட்டு கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கொண்டு சென்ற குடங்களில், தீர்த்தம் நிரப்பினர். பின் கோவில் குருக்கள் பூஜை செய்தார். தொடர்ந்து பசு, காளைகள், ஒட்டகம் செல்ல, பக்தர்கள் தீர்த்தக்கு-டங்களை சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நாளை காலை, 7:00 முதல், 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
05-Sep-2024