உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோட்டார் ஒயர் திருடிய இரண்டு பேர் கைது

மோட்டார் ஒயர் திருடிய இரண்டு பேர் கைது

தாரமங்கலம்: தாரமங்கலம் பாப்பம்பாடியை சேர்ந்தவர் பழ-னிசாமி, 37, விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள சோளப்பயிருக்கு, மோட்டார் மூலம் நேற்று முன்தினம் தண்ணீர் பாய்ச்சி உள்ளார். அப்போது மின்தடை ஏற்பட்டதால், மோட்டரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் தண்ணீர் பாய்ச்ச, அவரும் பக்கத்து நிலத்தை சேர்ந்த சின்னபையனும் வந்தனர். அப்போது சின்னப்பம்பட்டியை சேர்ந்த விஜய், 27, அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, 26, ஆகியோர் கிணற்றில் இருந்த மோட்டார் ஒயரை திருடியுள்ளனர். பழனிசா-மியை பார்த்த உடன் தப்பித்து ஓடினர்.பழனிசாமி புகார்படி, தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, விஜய், கார்த்திக்ராஜா ஆகி-யோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை