காட்டுப்பூனை வேட்டை வாலிபர் சிறையில் அடைப்பு
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம், கருங்கரடு காப்புக்-காட்டில் காட்டுப்பூனை, கம்பிவலையில் சிக்கி இறந்து கிடந்தது. இதை வாழப்பாடி வனத்துறையினர் நேற்று பார்த்தனர். தொடர்ந்து கம்பி வலை வைத்து வேட்டையாடியவரை பிடிக்க பதுங்கி இருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூனையை எடுக்க முயன்றவரை, வனத்துறையினர் சுற்றிவளைத்தனர். விசார-ணையில், சின்னகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செல்வம், 53, என தெரிந்தது. அவரை, நீதிபதி சன்மதி உத்தரவுப்படி ஆத்துார் சிறையில் அடைத்தனர்.