உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டிஏற்காடு:ஏற்காட்டில் வனத்துறை சார்பில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் காஷ்ய ஷஷாங் ரவி தொடங்கி வைத்தார். சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழி வேல், போட்டியில் ஓடினார். மலைப்பாதை, 20வது கொண்டை ஊசி வளைவில் தொடங்கி, ஒண்டிக்கடை ரவுண்டானா, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன், ஜெரீனாக்காடு வழியே, சூழல் சுற்றுலா பூங்கா வரை, 5.5 கி.மீ., ஓடினர்.இதில் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், உள்ளூர் இளைஞர்கள், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ஓடினர். மாணவர் நிஷாந்த், 22.39 நிமிடத்தில் ஓடி, முதலிடம் பிடித்தார்.சஞ்சய், தீபக், சுதர்சன், நிர்மல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு சான்றிதழுடன் கோப்பை வழங்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், பயிற்சி உதவி வன பாதுகாவலர் கீர்த்தனா, ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை