உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் திறப்பு

போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் திறப்பு

போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் திறப்புஏற்காடு:ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பலர், இரு, நான்கு சக்கர வாகனங்களில் வந்து ஏற்காட்டை சுற்றிப்பார்த்து செல்கின்றனர். இதனால் அங்குள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. ஏற்காடு போலீசார், நெரிசலை சரிசெய்ய சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், நேற்று திறந்து வைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் இரு எஸ்.ஐ., உள்பட, 16 போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை