உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்துக்கடையில் மாமூல்எஸ்.ஐ., சஸ்பெண்ட்

சந்துக்கடையில் மாமூல்எஸ்.ஐ., சஸ்பெண்ட்

சந்துக்கடையில் 'மாமூல்'எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'ஆத்துார்:சேலம் மாவட்டம் தலைவாசல், இலுப்பநத்தத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி, அதே பகுதியில் சந்துக்கடை நடத்தி, கூடுதல் விலைக்கு விற்று வந்தார். இவரிடம், வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கருப்பண்ணன், மொபைல் போனில் பேசியபோது, 2,500 ரூபாய் கேட்டார். அதற்கு செந்தில்குமார், 'ஏற்கனவே 1,000 கொடுத்துவிட்டேன்; மீதி, 500 தருகிறேன்' என்றார். அதை ஏற்க முடியாது என கூறிய எஸ்.ஐ., போன் இணைப்பை துண்டித்தார்.ஆனால் அவர் மாமூல் கேட்ட உரையாடல், சமூக வலைதளத்தில் பரவியது. தொடர்ந்து கடந்த பிப்., 26ல், கருப்பண்ணன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின் விசாரணை நடத்திய நிலையில், நேற்று, எஸ்.ஐ.,யை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை