உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சலவை தொழிலாளிகளுக்குதனி பட்டா கிடைக்குமா

சலவை தொழிலாளிகளுக்குதனி பட்டா கிடைக்குமா

சலவை தொழிலாளிகளுக்குதனி பட்டா கிடைக்குமாசேலம்:இடைப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் மேல்முகம், முண்டாச்சியூர் காட்டுவளவை சேர்ந்த சலவை தொழிலாளர்கள், காலனி மக்கள் ஒருசேர திரண்டு வந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், எங்கள் சமூகத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா இடத்துக்கு சென்று வருவதற்கான வழித்தடத்தை, தனியார் நில உரிமையாளர்கள் சிலர் ஆக்கிரமித்து கொண்டதால், அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும். அத்துடன், கூட்டு பட்டாவை, தனி பட்டாவாக மாற்றி, அதை ஆன்லைன் பட்டாவாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ