உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ., மாநாடுக்கு கால்கோள் விழா

பா.ஜ., மாநாடுக்கு கால்கோள் விழா

பா.ஜ., மாநாடுக்கு கால்கோள் விழாஓமலுார்:ஓமலுார் அருகே, தர்மபுரி - சேலம் பைபாஸில் உள்ள தாமரை திடலில் வரும், 19ல், பா.ஜ.,வின் சேலம் பெருங்கோட்டம் சார்பில், 'தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம்' மாநாடு நடக்க உள்ளது.அதற்கு கால்கோள் விழா, நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில், மாநாட்டு திடலில் சிறப்பு பூஜை போடப்பட்டது.தொடர்ந்து ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:மாநாட்டில் மோடி அரசின், 10 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி அமைப்படும். அதில் மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மக்கள் என் யாத்திரை' குறித்தும் இடம்பெறும். காலை, 10:00 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்கும். மதியம், 3:00 முதல் இரவு, 9:00 மணி வரை மாநாடு நிகழ்வு நடக்கும். பின், 'சிவாஜியின் இந்து சாம்ராஜ்யம்' எனும் நாடகம் அரங்கேறும். மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும். சேலம் பெருங்கோட்டத்தில் இருந்து, 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.சேலம், நாமக்கம், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை