உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள கவுன்சிலருக்கு அவகாசம்

ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள கவுன்சிலருக்கு அவகாசம்

சேலம், ;சேலம், சேலத்தாம்பட்டியில் உள்ள கணபதி கார்டன் குடியிருப்பு பகுதியில், 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில், 30 அடி பாதை, குடியிருப்பு பயன்பாட்டில் இருந்த நிலையில், 59வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முருகன் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து மக்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.இதையடுத்து சேலம் மேற்கு தாசில்தார் மனோகரன், சூரமங்கலம் போலீசார், நேற்று ஆக்கிரமிப்பை மீட்க சென்றனர். அப்போது கவுன்சிலர் முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். பின், அதிகாரிகளிடம் பேசினார். அப்போது, 2 நாள் அவகாசம் தரும்படி முருகன் கேட்க, அதிகாரிகளும் அவகாசம் வழங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ