உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாதுவர்களாக செயல்பட மாணவர்களுக்கு அறிவுரை

துாதுவர்களாக செயல்பட மாணவர்களுக்கு அறிவுரை

சேலம் அரசு கலைக்கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தாதேவி, மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். அப்போது, 'போதை பொருள் தடுப்புக்கு துாதுவர்களாக செயல்பட வேண்டும்' என, மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். பின் கவிதை, நாடகம், பொன்மொழி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் பிரேமலதா உள்பட பலர் பங்கேற்றனர்.சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தொடங்கிவைத்தார். மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முக்கிய சாலைகள் வழியே சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தனர். அதேபோல் சேலம் கோட்டையில் டவுன், செவ்வாய்ப்பேட்டை போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் கலைக்குழுவை சேர்ந்தவர்கள், 'டிஸ்னி' பொம்மை அணிந்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ