உடைந்த 1,000 முட்டை அழிப்புபயன்படுத்தினால் நடவடிக்கை
உடைந்த 1,000 முட்டை அழிப்புபயன்படுத்தினால் நடவடிக்கைஇடைப்பாடி:சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, விற்பனைக்கு முட்டைகளை ஏற்றி வந்த மாருதி வேனை சோதனை செய்தனர். அதில் உடைந்த நிலையில், ஈ மொய்த்தபடி, 1,000 முட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வேனுடன் முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் அந்த முட்டைகள், தனி இடத்தில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சேலம் மாவட்டத்தில் உணவகம், பேக்கரிக்கு உடைந்த முட்டைகள் விற்கப்படுகின்றன. உடைந்த முட்டைகளை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் வரக்கூடும் என்பதால் அதை அறவே பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்துவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.