உளுந்து வி.பி.என்., 12புது ரகத்தை பயிரிடலாம்
உளுந்து வி.பி.என்., 12புது ரகத்தை பயிரிடலாம்வீரபாண்டி:உளுந்து வி.பி.என்., 12 எனும் புது ரகத்தை சாகுபடி செய்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:தமிழக வேளாண் பல்கலை, கடந்த மாதம் கே.யு., 2016, வி.பி.என்., 12 ஆகிய ரகங்களை இணைத்து, உளுந்து வி.பி.என்., 12 எனும் புது ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இறவை, ஆடி, புரட்டாசி, சித்திரை பட்டத்துக்கு ஏற்ற ரகம். நெல் தரிசு, பின் சம்பா பட்டத்தில் விதைத்தால், 75 முதல், 80 நாட்களில் அறுவடை செய்து விடலாம். இந்த ரகத்தில் வம்பன் 6, 12 ரகங்களை விட அதிக மகசூல் கிடைக்கும். ஹெக்டேருக்கு, 859 கிலோ வரை உளுந்து கிடைக்கும்.ஒளி உணராத்திறன் கொண்டதோடு, நீண்ட காய்கள், அதிக விதைகள் பிடிக்கும். 500 கிராம் தானியத்தில், 2.25 லிட்டர் என்ற அளவில் அதிக மாவு பொங்கும் தன்மை கொண்டது. மஞ்சள் தேமல், இலை நெளிவு, சாம்பல் நோய்களை தாங்கி வளரும் தன்மை கொண்டது. வெள்ளை ஈ, காய் துளைப்பான் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக, இந்த ரகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், புது ரக உளுந்து வி.பி.என்., 12 சாகுபடி செய்து பயன்பெறலாம்.